நாட்டில் தற்போது நிலவும் அரிசிப் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அதனை நிவர்த்தி செய்யும் வகையில், அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தீர்மானத்தின் படி, அனுமதிப் பத்திரம் இன்றி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை சுயாதீனமான அரிசி இறக்குமதி செய்வதற்குக்கு அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையினால் நெற்பயிர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு உள்ளிட்ட அரிசி வகைகளுக்கான தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும், அரிசியின் சில்லறை விலையில் மாற்றம் ஏற்படாது என்றும், நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும் என்றும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். (ஐ-12)
