கிளிநொச்சியில் அன்னை பூபதி நினைவு தினம் அனுஷ்டிப்பு!

ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அகிம்சை வழியில் போராடித் தன்னுயிரைத் தியாகம் செய்த தியாகத் தாய் அன்னை பூபதியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்,கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டக் காரியாலயமான ‘அறிவகத்தில்’ இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந் நினைவேந்தல் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!