பாடசாலை மாணவர்களிடையே வலு – சக்தி சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், “ நிலையான நாளைக்காக சக்தியை இன்று சேமிப்போம்“ என்ற தொனிப்பொருளில் “சுரகிமு லங்கா”என்ற பெயருடைய தேசிய செயற்றிட்டம் ஒன்றைப் கல்வி அமைச்சு அறிமுப்படுத்தியுள்ளது.
இந்தச் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கென கல்வி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களிடையே சக்தித் தேவை, அதன் முக்கியத்துவம் மற்றும் சிக்கனமான சக்திப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் ஒவ்வொரு பாடசாலையிலும் முதலாவது தவணை முடிவதற்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், முதலாந் தவணைக்குள் அதனைச் செயற்படுத்த முடியாத பாடசாலைகளின் அதிபர்கள் பொருத்தமான பிறிதொரு நாளைத் தெரிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றும் அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
