மூவாயிரத்துத் 900 மெற்றிக்தொன் எரிவாயு வந்தது!

நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ள 3 ஆயிரத்து 900 மெட்ரிக்தொன் சமையல் எரிவாயுவை முனையங்களுக்கு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்றுக் கொண்டுவரப்பட்ட எரிவாயுவை விரைவில் கொள்கலன்களில் நிரப்பி அவற்றைப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த நிலையில் நாட்டில் போதுமான களஞ்சியசாலைகள் இன்மையால், கொள்வனவு செய்யப்பட்ட 33 ஆயிரம் மெற்றிக்தொன் எரிவாயுவை மாலைதீவில் களஞ்சியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அங்கிருந்து மூன்று தினங்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்களில் நாட்டுக்கு எரிவாயுவை கொண்டுவர லிட்ரோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், 29 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் ஒன்பதாயிரம் மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!