நாட்டில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கியூ.ஆர். குறியீடு முறைமையின் கீழ் இதுவரை 51 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டிஜிற்றல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வழங்கிய முக்கிய விவரங்கள் வருமாறு:
இதுவரை 5,103,991 வாகனங்கள் இந்த முறைமையின் கீழ் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.இன்று காலை 9.00 மணி நிலவரப்படி, இதற்கு முன்னர் கியூ.ஆர். முறைமையைப் பயன்படுத்தாத 439,997 புதிய வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது 5,094,566 பேர் இந்த முறைமையினைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற்று வருகின்றனர் என்றார்.
இந்த கியூ.ஆர். முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் குறித்து கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர், முறைமையிலிருந்த 95 வீத குறைபாடுகள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
