யாழ்ப்பாணம் நகரை அண்டிய கொட்டடிப் பகுதியில் உள்ள வீட்டு வளவில் இருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.
கொட்டடி ஆஸ்பத்திரி வீதிப் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் மலசல கூடத்துக்கான குழி வெட்டிய போது, குழியில் இருந்த மர்மப் பொதி தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸாருக்கு வழங்கிய தகவல் நீதவானின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதனையடுத்து நீதவான் முன்னிலையில் குழியில் காணப்பட்ட இனந்தெரியாத – சந்தேகத்துக்கிடமான பொருள்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீதவானின் பிரசன்னத்துடன், விசேட அதிரடிப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடமான பொருள்கள் மீட்கப்பட்டன. இதன் போது, 30 ரி-56 ரகத் துப்பாக்கிகளும், 5000 ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.





