இரத்தினபுரியில் பாரிய விபத்து ஐவர் படுகாயம்

இரத்தினபுரி, திரிவானகெட்டிய பகுதியில் இன்று 31ஆம் திகதி காலை லொறி ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரியிலிருந்து எம்பிலிபிட்டி நோக்கி, கட்டிட நிர்மாணப் பொருட்களை ஏற்றிச் சென்ற லொறியும், மொனராகலையிலிருந்து ஹொரணை நோக்கிப் பயணித்த வேனும் நேருக்கு நேர் மோதியுள்ளன.

விபத்தில் வேன் சாரதி,வேனில் பயணித்த  மூவர் மற்றும் வேனுடன் மோதிய லொறி கவிழ்ந்ததில் லொறி உதவியாளரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துத் தொடர்பில் இரத்தினபுரி போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!