நடைபெற்று முடிந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டவர்களில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் தமது தேர்தல் செலவீனங்கள் குறித்த வரவு செலவு அறிக்கைகளைச் சமர்ப்பிக்கத் தவறியுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலின்படி, தேர்தலில் போட்டியிட்ட 8 ஆயிரத்து 361 வேட்பாளர்களில் 7 ஆயிரத்து 412 பேர் தமது வரவு – செலவு குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
பல்வேறு சுயேச்சைக்குழுக்களிலும் போட்டியிட்ட 690 பேரில் 493 பேரும், தேசியப் பட்டியல்களினூடாகப் பெயரிடப்பட்ட 527 பேரில் 434 பேரும் மட்டுமே வரவு – செலவு குறித்த அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர் என்றும் அந்த ஊடக அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.