அவுஸ்திரேலிய ஊடகவியலாளர் ஒருவரின் கைப்பை உணவட்டுன கடற்கரைப் பகுதியின் உணவகம் ஒன்றிற்கு அருகில் திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய ஊடகவியலாளரான இளம் பெண், இலங்கைக்குத் தனிப்பயணியாக வருகை தந்துள்ளார்.
திருடப்பட்ட பையினுள் iPhone ரக கைத்தொலைபேசி, வங்கி அட்டைகள் மற்றும் பணம் என்பன இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து அவர் இன்று 4ஆம் திகதி உணவட்டுன சுற்றுலாப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், சந்தேகநபர் நாளை 5ஆம் திகதி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
