போதைப் பேரழிவில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்றிட்டத்தின் கீழ் எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையான ஒரு வார காலப் பகுதி தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆரம்பிக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்றிட்டத்தின் அங்கமாக குறிப்பிட்ட ஒரு வார காலப்பகுதியினுள் போதைக்கெதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், போதை ஒழிப்பு கல்வி மற்றும் நடவடிக்கைகளைச் சமூக மட்டத்தின் மேற்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அரச திணைக்களங்கள், நிறுவனங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பொது நிருவாக, மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
