பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிதாக கொண்டுவரப்படவுள்ள, பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்கும் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மன்னாரில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பேருந்து நிலையத்திற்கு முன்பாக மக்களின் கையெழுத்துக்கள் சேரிக்கப்பட்டன.
ஊடக சுதந்திரம் மதிக்கப்படவேண்டும், நீதித்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும், மனித மாண்பு பேணப்படவேண்டும், உயிர் வாழ்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் மீனவ சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
