காரைநகர் கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் நேற்றிரவு 01ஆம் திகதி முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!