இலங்கையில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் செயற்பாடுகள் குறித்துப் பொதுமக்கள் முறைப்பாடு செய்வதற்கு வசதியாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.
0777771954 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்குத் தகவல்களை அனுப்பி வைக்குமாறும், தகவல் தருபவர்களின் விவரங்கள் இரகசியமாகப் பேணப்படும் என்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

