புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் அதிகரிக்கும் ஆபத்து – சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை..!!!

இந்த புத்தாண்டு காலத்தில் விபத்துக்கள் அதிகம் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தினர் இன்றைய தினம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில்  மேலும் தெரிவிக்கையில்

இன்றைய தினம் “சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு காலத்தில் விபத்து தடுப்பு” எனும் தொனிப்பொருளில் கொழும்பில் இடம்பெற்றுள்ள ஊடக சந்திப்பு ஒன்றிலேயே சுகாதார மேம்பாட்டு பணியகத்தினர்  இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த  ஆண்டு ஒரு வித்தியாசமான ஆண்டு என்று சொன்னால் சிங்கள, தமிழ்,புத்தாண்டு மற்றும்  முஸ்லீம் ஈத் பெருநாளை கொண்டாடும் ஆண்டு ஒரே தினத்தில் வருகின்றன .

11,12,13,14 ஆகிய நாட்களில் சிங்கள,தமிழ், முஸ்லீம் புத்தாண்டாக இருக்கின்றன. இந்த நாட்களில் உண்மையில் சந்தோசமாக இருக்க வேண்டிய  நாள். எனினும் ஒரு சில காரணங்களினால் எங்களால் எங்களினுடைய சந்தோசம் பாதிப்புக்கு உட்படலாம். விபத்துக்கள் அதில் மிகவும் முக்கியம்.

தரவுகள் சொல்கின்றன 3 தொடக்கம் 4 மில்லியன் மக்கள் விபத்துக்களினூடாக வைத்தியசாலைக்கு போய்  வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுகின்றார்கள் என்றும் 1.2 மில்லியன் அளவு நோயாளிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெருவதுடன் 12000  பேர் விபத்து காரணமாக இறக்கின்றார்கள்.

அத்துடன் இந்த அளவு இந்த நாட்களில் விபத்துக்கள் மிகவும் அதிகரிக்கின்றன எனவும் இதனாலே இந்த விபத்துக்களை எவ்வாறு குறைக்கலாம் என்பதை யோசிக்கவேண்டி இருக்கின்றது.

முக்கியமாக பாதை விபத்துக்களை குறைப்பதற்கு   வேகக்கட்டுப்பாட்டை பேண வேண்டும், தலைக்கவச பாவனையினை நாம் முக்கியப்படுத்த வேண்டும்,  மதுபாவனையுடன் செல்வதை இல்லாமல் ஆக்க வேண்டும். அத்துடன் நீரில் மூழ்கி மரணிப்பவர்க்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதனால் அத்தனையும் குறைக்க வேண்டி இருக்கின்றது.  அதனால் இந்த காலப்பகுதியில் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த நாட்களில் பொதுவாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன புத்தாண்டு நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த நிகழ்வுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மிகச்சுருக்கமாக சொன்னால் விபத்துக்கள் காரணமாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை இந்த நாட்களில் மிக அதிகமாக இருக்கின்றது. அதனை குறைப்பதற்கான எல்லாவிதமான முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்ள வேண்டும் – எனவும் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!