தொடரும் இந்தியாவின் நிவாரண உதவிகள்

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்தியாவிலிருந்து மேலும் ஒரு தொகுதி உலர் உணவுப் பொருட்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான C-17 விமானத்தின் மூலம் இந்த நிவாரணப் பொருட்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் 15 தொன் உலர் உணவுகள் மற்றும் 10 தொன் மருந்துகள் அடங்கிய நிவாரணத் தொகுதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அத்துடன், ‘சௌர்யா’ எனும் இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பல் மூலம் 50 தொன் உலர் உணவுப் பொருட்கள் நேற்று 15ஆம் திகதி நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இந்த உணவுத் தொகுதியை இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யஞ்சல் பாண்டே, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்குவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!