அடுத்த மாதம் முதல் எரிபொருள்களின் விலை மாற்றம் செய்யப்படவுள்ளதுடன், தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு – கியூ.ஆர் முறைக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல், நிதி மற்றும் வர்த்தகப் பிரிவுகளுடன் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, அடுத்த மாதம் முதல் எரிபொருள்களின் விலை மாற்றம் செய்யப்படவுள்ளதுடன், கியூ.ஆருக்கான வாராந்த எரிபொருள் ஒதுக்கீடும் அதிகரிக்கப்படவுள்ளதாக என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.