இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான மூத்த தமிழ் அரசியல்வாதி இரா. சம்பந்தன் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 91 ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இரா. சம்பந்தன் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று பின்னிரவு உயிர் நீத்ததாக கொழும்பிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன.