அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார். களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட பீட்ரு தேயிலைத் தொழிற்சாலைக்குள் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி அத்துமீறி நுழைந்ததாக அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கின் பிரதான சந்தேகநபராக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெயரிடப்பட்டுள்ளார். இந்த இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாததால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் பிரசன்னப்படுத்துமாறு நுவரெலியா பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.