சில்மிஷத்தை தடுக்க பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் அதிகாரிக்கு நடந்த சம்பவம்..!

சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் விசாரணை நடத்த பேருந்தில் ஏறிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தனியார் நிறுவனம் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நுவரெலியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் 44 வயதுடைய தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு தழுவிய யுக்திய நடவடிக்கையுடன் இணைந்து பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!