நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் 6164 வீடுகளுக்கு முழுமையான சேதம் அடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று 14ஆம் திகதி காலை வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் அனர்த்தங்கள் காரணமாக 112,110 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை மண்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளதாகவும் 184 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
23041 குடும்பங்களைச் சேர்ந்த 72911 பேர் 796 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதோடு, 391401 குடும்பங்களைச் சேர்ந்த 1,364,481 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது
