பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கியது

யாழ் வடமராட்சி வளலாய்  கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று இன்று 17 ஆம் திகதி கரையொதுங்கியுள்ளது.

சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால்  வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரை ஒதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதேவேளை மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில்  அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதிங்கியிருந்தன.

அவ்வாறே சேதமடைந்த சிலையை கடலில் போட்ட நிலையில் அந்த சிலை வளலாய் பகுதியில் கரையொதிங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறித்த சிலை தற்போது வளலாய் கடற்தொழிலாளர் சங்க கட்டடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சிலை கரை ஒதுங்கியமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!