யாழ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட மாணவன் கைதாகியுள்ளார்.
ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் நேற்று 16 ஆம் திகதி யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று சந்தேகநபரை ஆஜர்படுத்திய வேளை எதிர்வரும் 30 திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
