களுவாஞ்சிகுடி விபத்தில் மூவர் படுகாயம்

மட்டகளப்பு, களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த மாங்காட்டைச் சேர்ந்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு 7 ஆம் திகதி மட்டக்களப்பு – கல்முனை வீதியில், மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியே விபத்துக்குள்ளக்கியுள்ளது.

விபத்தில் காயமடைந்த 3 பேரும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!