கொட்டாஞ்சேனை 16 ஆவது ஒழுங்கையில் நேற்று இரவு 7 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்பவரின் சகா என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கார் ஒன்றில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 43 வயதுடைய நபர் என்றும், துப்பாக்கிச் சூட்டுக்கு 9 மில்லிமீற்றர் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
