அமெரிக்க கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்!

அரபிக் கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்த அமெரிக்க சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கப்பல் அரபிக்கடலில் ஏடன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நிலையில் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

காஸா முனையில் பாலஸ்தீனியர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்வரை இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்கள், அரபிக் கடல், செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே, செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்குச் செல்லும் சரக்கு கப்பல்களைக் குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் கடந்தவாரம் வான்வழி தாக்குதலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!