உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போடியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினுள் அமைந்துள்ள மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடங்கும் 17 உள்ளூராட்சி சபைகளுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் கட்டுப் பணத்தினை செலுத்தினர்.