இலங்கையிலுள்ள அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தராமல் அரசாங்கம் காலந் தாழ்த்துவது உட்படப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நண்பகல் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் தொழிற்சங்க கூட்டுக்குழு ஆகியவற்றின் தீர்மானத்துக்மைவாகவே அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் இன்று நண்பகல் 12 முதல் ஒரு மணிநேரம் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழகங்களின் முன்றல்களில் கூடிய ஊழியர்கள் பதாதைகளைத் தாங்கிக் கோசங்களை எழுப்பியவாறு போராடத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்றலில் ஆணைக்குழு ஊழியர்கள் மேற்கொண்ட போராட்டம் :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழக நுழைவாயிலில் நடத்திய போராட்டம் :
கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் திருகோணமலை வளாகம் ஆகிய இடங்களில் கிழக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் நடத்திய போராட்டம் :
வவுனியாப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் பல்கலைக்கழக நுழைவாயிலில் நடத்திய போராட்டம் :