யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இம்மானுவல் ஆனோல்ட் யாழ்ப்பாணம் பொலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது, கட்சியின் சக உறுப்பினர் ஒருவரைத் தாக்கினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஆனோல்ட், சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தொகுதிக் கிளைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், கூட்டம் முடிவடைந்த பின்னர் கட்சி அலுவலகத்தினுள் கைகலப்பாக மாறியதனால் தாக்குதலுக்குள்ளான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், முன்னாள் முதல்வர் ஆனோல்டே தாக்கியதாகக் குறப்பிடப்பட்டிருந்தார். இதனடிப்படையில் முன்னாள் முதல்வர் ஆனோல்டிடம் வாக்குமூலம் பெறுவதற்காக யாழ்ப்பாணம் பொலீஸார் தேடிவந்தனர்.
இந்நிலையில், வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்துக்குச் சென்ற வேளையில் முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
One thought on “முன்னாள் யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் கைது!”