யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கலும் இன்று இடம்பெற்றது.
கலாசாலை வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும், முகாமைத்துவ கற்கைகள் வணிக பீட மாணவர் ஒன்றியமும் இணைந்து இந்த நிகழ்வை முன்னெடுத்திருந்தனர்.
இந் நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்கு மாணவர்களால் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மும் மொழியிலும் அச்சிடப்பட்ட துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
இதன் போது அதிகளவான சிங்கள மாணவர்களும் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.