பரசூட் சாகசத்தின் போது விபத்தில் சிக்கிய விமானப்படை வீரர்!

விமானப்படையினரால்  நடத்தப்பட்ட   பரசூட் சாகசத்தின் போது எதிர்பாராத விதமாக  விமானப்படை சாகச வீரரொருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு வான் சாகசம் 2024 என்ற கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்றைய தினம் பரசூட் சாகசத்தில் ஈடுபட்ட வீரர் ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். எனினும் அவருக்கு பாரதூரமான பாதிப்புக்கள் எவையும்  ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நாட்டின் 76ஆவது சுதந்திரதினத்திற்கான பயிற்சி சாகச நிகழ்வின்போதும்  இவ்வாறானதொரு விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!