வெங்காயத்தின் விலை அதிகரிக்கும் அபாயம்!

இலங்கைக்கான பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தால் புத்தாண்டு பண்டிகையின் போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 700 அல்லது 800 ரூபாயாக உயரக்கூடும் என வெங்காய இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது”  நாட்டில் பெரிய வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதேசமயம்  வளைகுடா பகுதிக்கான வெங்காய  ஏற்றுமதியை பாகிஸ்தான் அரசு நிறுத்தி வருகின்றது.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வது மலிவாக இருப்பதால்  இதற்கு அரசாங்கத்தின் தலையீடு தேவையாக உள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!