யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வாகன விபத்து!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி ஒன்று வர்த்தக நிலையத்தின் கட்டித்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியின் சாரதி காயமடைந்துள்ளார்.

பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்றைய தினம் நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் பயணிக்கும் போது கட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் லொறியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்ததுடன் வர்த்தக நிலையத்தின் கட்டிடமும், அதன் அருகே இருந்த இருந்த முச்சக்கரவண்டியொன்றும் சேதமடைந்தன.

அதே சமயம்  லொறியின் சாரதியும்  காயமடைந்த நிலையில்  யாழ்  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார்  முன்னெடுத்து  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!