ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி கோட்டாபாயவின் ஆட்சியை விட மோசமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் இன்று மாவீரர் தின வாரத்தில் கைதான கைதிகளை பார்வையிட மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் கூறியுள்ளார்.
மேலும், ரணிலின் கடைசி கனவு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக நியமிக்கப்பட வேண்டும் என்பது இந்த கனவு நிறைவேறுவதற்கான சாத்தியம் குறைவு. இவ்வளவு காலமும் தமிழ் தலைவர்களே தமிழர்களை ரணில் நல்லவர் என கூறி ஏமாற்றியுள்ளனர். இனியும் ரணிலின் நாடகத்தை தமிழ் மக்கள் நம்ப தயார் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.