கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று நேற்று மஹவ பொலிஸாரால் எசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சாரதியின் இருக்கைக்கு அருகில் 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 143 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதி இருக்கைக்கு அருகாமையில் சிறிய பொதி ஒன்று இருந்ததுடன், அது தனது உணவு பொதி என சாரதி கூறியுள்ளார். எனினும் பொலிசார் அதனை சோதனையிட்ட போது இந்த ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
43 வயதான சந்தேகபர், ராஜாங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதி இன்று மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.