பெலவத்தையில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் இசுருபாய கட்டிடத் தொகுதியில் மின்னல் தடுப்புப் பாதுகாப்புப் பொறிமுறைக்காகப் பொருத்தப்பட்டிருந்த சுமார் ஆயிரத்து 731 அடி அளவுடைய 51 இலட்சம் பெறுமதியான செப்புக் கம்பிகள் காணாமல் போயுள்ளதாக தலங்காம பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலீஸார் விசாரணைகளை மேற்கொணடுள்ளனர்.
செப்புக் கம்பிகள் வெளியாட்கள் நுழைய முடியாத வகையில்; அமைச்சுப் பணியாளர்கள் மட்டும் போய் வரக் கூடியதான கூரை மேற்பரப்பிலேயே பொருத்தப்பட்டிருந்தது எனவும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் இறுக்கமாக இருந்த போதிலும், களவாடப்பட்ட செப்புக் கம்பிகள் அமைச்சு வளாகத்திலிருந்து மிகவும் நுணுக்கமான முறையில் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
அமைச்சில் பணியாற்றும் பல்வேறு தரங்களையுடைய சுமார் எட்டுப் பேரிடம் இது வரை வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைகள் தொடர்கின்றன.