பாலித தெவரப்பெருமவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது!

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், மதுகம – கரம்பேதர பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித தெவரப்பெரும கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.

பிரேத பரிசோனையை அடுத்து, அன்னாரின் உடல், அவரது உறவினர்களிடம் நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அன்னாரின் உடல் அவரது வீட்டில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

அவரது உடலுக்கு அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

மேலும், அன்னாரின் மறைவையொட்டி, அவரது பிரதேசத்தின் பல இடங்களில் மரண அறிவித்தல் பதாதைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளதோடு, வெள்ளைக் கொடிகளையும் பறக்கவிட்டு, பொது மக்களின் தங்களின் சோகத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

இலங்கை அரசியல் வரலாற்றில் இன- மத- மொழி பேதம் கடந்து அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதியாக கருதப்பட்ட பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள், இன்று மதுகம- கரம்பேதர பகுதியில் இடம்பெற்றன.
இறுதி அஞ்சலி நிகழ்வில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட அரசியல்வாதிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, தனது இறுதிக் கிரியைகளுக்காக தானே அமைத்துக் கொண்ட மயானத்தில், அன்னாரின் உடல் இன்று பிற்பகல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!