உழவர் திருநாளான பாரம்பரிய தைப் பொங்கல் பண்டிகைக்கான சடங்குகள், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று ஜனவரி 14 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, பாரம்பரிய சடங்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பொங்கல் இடம்பெற்றது. பிரதமர் அலுவலகப் பணியாளர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி மற்றும் பிரதமர் அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.