கடற்தொழில், நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங்க்கும் இடையிலான சிநேகபூர்வக் கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது.
கடற்தொழில் அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் பற்றி இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் கூட்டு முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளும், சீனத் தூதரகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.