இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்குப் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், ஜனதிபதி செயலகத்தில் வைத்து மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவுக்கு இன்று வழங்கப்பட்டது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!