யாழில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதை ஒழிப்பு பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் வியாபாரி ஒருவரும், இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரும் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஆறு கால்மடப்பகுதியில் நேற்று 22ஆம் திகதி குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இக் கைது நடவடிக்கையின் போது 110 போதை மாத்திரைகளுடன் 20 மற்றும் 22 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் பொலிஸாரால் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னேடுக்கபட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!