உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, ஆஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக வை.கே. குணசேகரவை நியமிப்பதற்கும், பஹ்ரைன் இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவராக எஸ்.எஸ். திசாநாயக்கவை நியமிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது.
உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்றுக் கூடியது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பிமல் ரத்நாயக்க, ஹினிதும சுனில் செனவி, குமார ஜெயக்கொடி ஆகியோரும், பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.