கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக தமிழக பங்குத்தந்தை அறிவிப்பு!

இலங்கை – இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து எவரும் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழக வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு அறிவித்துள்ளார்.

மேலும் வெளிமாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து கச்சதீவு திருவிழாவிற்கு படகுகளில் செல்ல பதிவு செய்தவர்கள் வீண் சிரமங்களை தவிர்க்க வேண்டும் எனவும், அவர்கள் விசைப்படக்கிற்கு செலுத்திய பணம் விரைவில் மீண்டும் வழங்கப்படும் என பங்குத்தந்தை மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!