இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இலங்கை வருகை

இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று 29ஆம் திகதி காலை இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

இதில் 4 பெண்களும் 76 ஆண்களும் அடங்குகின்றனர்.

மேலும், நான்கு மோப்ப நாய்களும் இந்தக் குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் மீட்கும் நோக்குடன் அனர்த்த நிவாரண உபகரணங்களுடன் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!