இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது-எடப்பாடி பழனிசாமி!

இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்

மதுரை விமான நிலையத்தில் இடம்பெற்ற சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார்

இதேவேளை பாஜகவில் இருந்து பலரும் அதிமுகவில் இணைகின்றனர் என்றும் கட்சி மாறுவது ஜனநாயக உரிமை. அதேபோல, போகிறவர்களையும் தடுக்க முடியாது எனவும் அவர் கூறினார்

அத்துடன் முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு அறிவித்த திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை அந்தவகையில் டைடல் பார்க் அறிவிப்பு,மதுரை விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், மெட்ரோ ரயில் திட்டம் ஆகியவை கிடப்பில் போடப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!