இலங்கையில் தயாரிக்கப்பட்ட பயணிகள் கப்பல் வெள்ளோட்டம்!

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான எக்கோ 80 எனும் பாரிய பயணிகள் கப்பல், வெள்ளோட்டம் செலுத்தி, அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைனின் தயாரிப்பான ECO 80 கப்பல், யாழ்ப்பாண கடற்பரப்பு களப்பில், வெள்ளோட்டம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியதாகவும், முழுமையாக குளிரூட்டப்பட்ட, சுகாதார வசதிகளுடனும் தயாரிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது சொகுசு வசதிகளுடன் அமைக்கப்படக் கூடியதாகவும் இது அமைந்துள்ளமை விசேட அம்சமாகும்.

அனைத்து மின்சாரத் தேவைகளையும் 48 சோலர் பனல் மூலமாக பூர்த்தி செய்யக்கூடியதாக இது அமைந்துள்ளது.

தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத்துறை தொடர்பான நிறுவனம் ஒன்றுக்காக மகாசென் மரைன், இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!