15 ஆம் இடத்துக்கு முன்னேறிய ‘யஷஸ்வி ஜெய்ஸ்வால்‘

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 15-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் சபையானது டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்மையில் வெளியிட்டது.

அந்தவகையில் இதற்கு முன்னர் 29 ஆவது இடத்தில் இருந்த இந்திய அணியின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக இரு இரட்டை சதங்கள் விளாசியதன் மூலமாக  14 இடங்கள் முன்னேறி 15வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்காரணமாக  விரைவில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் 10 துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில்  இடம்பிடிப்பார் என பார்க்கப்படுகின்றது.

குறித்த பட்டியலில் கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களை விளாசியுள்ள கேன் வில்லியம்சன், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!