யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி, கைதடி – நுணாவில் பைரவர் கோவிலடியில் இன்று காலை 11 மணியளவில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதனால் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் சிவபாலன் பிரவீன் என்ற மாணவனே உயிரிழந்தவராவார்.
மாட்டு வண்டிச் சவாரிப் போட்டிக்காக வண்டில் மற்றும் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதனால் குறித்த விபத்து இடம் பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த கண்டுவில் வீதி, சாவகச்சேரியை சேர்ந்த 19 வயதான மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் மரண விசாரணைக்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி போலீஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.