மீண்டும் உயரும் தங்கத்தின் விலை : இன்றைய விலை நிலைவரம்!

இலங்கையில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (21) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக நகை வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் பவுண் ஒன்று 269,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 249,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 33,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 31,125 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!