அதிவேக நெடுஞ்சாலையில் மின்வெட்டு!

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பாலான பகுதிகள் மின்கம்பங்களின் மின்குமிழ்கள் இயங்காததால் இருளில் மூழ்கி இருந்துள்ளன.

குறித்த சம்பவம் நேற்று (13) இரவு இடம்பெற்றுள்ளது.

மின்சார கேபிள்கள் அறுந்துள்ளமை மற்றும் நிலத்தடி கேபிள்கள் திருடப்பட்டுள்ளமை இதற்கான காரணங்கள் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த நிலையில், நெடுஞ்சாலையின் மின்சார கேபிள்கள் திருடப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஜனவரி மாதம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் அகற்றப்பட்டதால் 286 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெடிகந்த பிரதேசத்தில் கோடரியை பயன்படுத்தி நான்கு விளக்கு கம்பங்கள் திருடப்பட்டுள்ளன. இதனால் 2.4 மில்லியன் ருபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!