ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம்.பி ஹரீஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பான கடிதம் கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கட்சியையும், கட்சித் தலைவரையும் பொதுவெளியில் விமர்சித்தனாலேலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,இடைநிறுத்தம் தொடர்பில் நியாயப்படுத்தும் ஆட்சேபனைகள் ஏதுமிருப்பின் அதனை விளக்குமாறு முன்னாள் எம்.பி. ஹரீஸிடம் கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.